Halloween தினத்தில் கியூபெக் நகரில் கொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் அஞ்சலி

Halloween (ஹாலோவீன்) தினம் அன்று கியூபெக் நகரில் போன்று வேடமிட்ட 24 வயதுடைய Carl Girouard மேற்கொண்ட கண்முடித்தனமான வாள் வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட சிகையலங்கார நிபுணர் Suzanne Clermont கும் அருங்காட்சியக ஊழியர் Francois Duchesne கும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட  Clermont வீடு அமைந்திருக்கும் Des Remparts தெருவில் கூடிய மக்கள் அங்கு அவர்கள் பூக்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளை வைத்து தமது அஞ்சலியினை செலுத்தினர்

வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் அடையாளங்கள் நிறைந்த ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமான பழைய கியூபெக் நகரின்  cobblestone  தெருக்களில் நடந்த இந்த  இரவு நேர தாக்குதல் குறித்த சில விவரங்களை மட்டுமே  பொலீசார் வெளியிட்டுள்ளனர்

தாக்குதலில் ஈடுபட்டவர்  இடைக்கால அரச ஆடைபோல உடை உடுத்தி வீதிகளில் வந்தவர்கள் மேல் கண்முடித்தனமான வாள் வீச்சு தாக்குதலை மேற்கொண்டார் என கியூபெக் நகர பொலீஸ் அதிகாரி Robert Pigeon  தெரிவித்தார்

சந்தேக நபர் கியூபெக் நகரில் வசிக்கவில்லை எனவும் மக்களை எப்படியாவது கொல்லவேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த தாக்குதலை செய்ததாக தான் எண்ணுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

சந்தேக நபரான Carl Girouard இனை பொலீசார் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கைது செய்து அவர் மேல் முதல் தர குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர் .காணொளிமூலம் நீதிபதி முன் ஆஜராகக்ப்பட்ட இவர் எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகப்படுவர்