Halloween கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு பிரதம மந்திரி Justin Trudeau வேண்டுகோள்

Halloween.தினத்தில் குழந்தைகள் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் Trick-or-Treat என்ற நிகழ்வினை தவிர்க்குமாறு கனேடிய பிரதமந்திரி Justin  Trudeau வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பெற்றோர்களும் சிறுவர்களும் வழமையான Halloween.தின கொண்டாட்டங்களில் ஈடுபட விரும்புவதை தான் நன்கு உணர்வதாகவும் ஆனால் நிலைமை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்தார்   

தானும் தான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபடி Halloween இனை கொண்டாட போவதாகவும் மேலும் தெரிவித்தார் 

ஒண்டாரியோ மாகாண முதல்வர் Doug Ford ,டொரோண்டோ நகர பிதா  John Tory ,மற்றும் டொரோண்டோ பிரதம வைத்திய அதிகாரி   Eileen de Villa ஆகியயோர் ஒண்டாரியோவில் வசிப்பவர்கள் இம்முறை Halloween கொண்டாட்டங்களை வழமையான பாரம்பரிய கொண்டமுறைகளை தவிர்த்து வேறு மாற்று வழிகளில் பாதுகாப்புடன் கொண்டாடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்