கொரோனா தொற்றுக்குள்ளாகிய இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர்

tiktamil.com

இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டித் தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்வதற்காக நாளை இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லவுள்ளது.

tiktamil.com