Covid-19 வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க CN Tower பார்வையாளர்களுக்கு மூடப்படுகின்றது

ஒண்டாரியோவில் தினசரி COVID-19 தொற்றுகள்  அதிகரித்து வருவதால், Ontario வின் சின்னமான CN Tower சனிக்கிழமை தொடங்கி பார்வையாளர்களுக்கு மூடப்படுகின்றது  

ஒண்டாரியோவில் COVID-19 பரவுவதைத் தடுக்க எங்கள் பங்கைச் செய்வதற்கான எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே தாம் இந்த முடிவினை எடுத்திருப்பதாக CN Tower அதிகாரி தெரிவித்தார்

“எங்கள் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என்றும் இதனால் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு நாங்கள் மன்னிப்பு கோருகிறோம், பொது சுகாதார அதிகாரிகளும், எமது நிறுவனத்தின் அதிகாரிகளும் மீண்டும் பார்வையாளர்களை அனுமதிப்பது  பாதுகாப்பானது என்று முடிவெடுத்ததும் CN TOWER   மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படும்” என்று CN TOWER  அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது