COVID-19 தொற்றின் பரவல் மீண்டும் முதியோர் நீண்டகால பராமரிப்பு நிலையங்களில் பரவ ஆரம்பித்துள்ளது

COVID-19 தொற்றின் இரண்டாவது அலையின் பரவலின் தீவிரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்ற குழப்பத்தில் பாதிக்கப்பட்ட பிராந்தியங்கள் இருக்கும் இந்த நிலையில் COVID-19 தொற்றின் பரவல் மீண்டும் முதியோர் நீண்டகால பராமரிப்பு நிலையங்களில்  பரவ ஆரம்பித்திருப்பதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்துள்ளார்

Dr. Theresa Tam இன் அறிக்கையின் படி  இன் அறிக்கையின் படி கோடை காலத்தில் COVID-19 தொற்றின் பரவல் அதிகமாக  20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்களை பாதித்த நிலையில், தற்போது COVID-19 தொற்றின் பரவல்  தற்போது வயதில் முதியவர்களை பாதிக்க தொடங்கியிருக்கின்றது என்றும்

சமீபத்திய வாரங்களில் நீண்டகால பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய இல்லங்களில் COVID-19 தொற்றுகள் பரவி  வருவதாகவும்,, ஆனாலும் கடத்த ஏப்ரல், மே மாதங்களில் முதியோர் நீண்டகால நிலையங்களில் வந்த  COVID-19 தொற்றின் பரவல் தாக்கத்தை விட தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்

இருப்பினும், வயது முதிர்ந்தவர்கள் COVID-19 தொற்றுகளினால் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும்,, பராமரிப்பு இல்லங்களில் எந்தவொரு பரவலும் பெரும்பாலும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்

ஒன்ராறியோவில் சனிக்கிழமையன்று 809 புதிய தொற்றுகளும், வைரஸ் தொடர்பான ஏழு புதிய இறப்புகளும் பதிவாகியுள்ளன, கியூபெக் மேலும் 1,097 புதிய COVID-19 தொற்றுகளும் 14 கூடுதல் இறப்புகளும் பதிவாகியுள்ளன.