Brampton இல் நடந்த விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டார்

நேற்று இரவு  Brampton இல் நடந்த விபத்து ஒன்றில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டார் Queen தெரு கிழக்கு,மற்றும் James தெரு பகுதியில் இரவு 9 .25  மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது .விபத்து நடந்த இடத்துக்கு சென்ற பொலீசார் காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக பொலீசார் தெரிவித்தனர்

விபத்து ஏற்பட ,காரணமாக இருந்த வாகனத்தை செலுத்திய சாரதி விபத்து நடந்த இடத்திலேயே நின்றதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலீசார் தெரிவித்தனர்