“BPO மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 10,000 இடங்களை ஒதுக்க வேண்டும்!” – முதல்வர் பழனிசாமி கடிதம்

BPO மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 10,000 இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் BPO மற்றும் IT சார்ந்த சேவைகளை ஊக்குவிக்கும் “BPO மேம்பாடு திட்டத்தை” தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால், 7,705 இடங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம், 8,387 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 16,774 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், 10,00 இடங்களை மத்திய அரசு ஒதுக்கும் பட்சத்தில் தமிழக அரசுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பை பெருக்க உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 13 நகரங்களில் 51 BPO மையங்கள் அமைக்கப்பட உள்ளதை முதலமைச்சர் பழனிசாமி தனது கடிதத்தில் சுட்டிகாட்டி உள்ளார்.