Article 15 ரீமேக்கில் நடிக்கவுள்ள உதயநிதி!

Udhayanidhi Stalin to star in Tamil remake of Article 15 | Entertainment  News,The Indian Express

நடிகர் உதயநிதி தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த நிலையில் இப்போது திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இப்போது தேர்தல் முடிய உள்ள நிலையில் இனி அவர் தன் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளார்.

ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.