Alberta இல் அமைந்துள்ள இராணுவ தளத்தில் நடந்த பயிற்சி விபத்தில் ஒரு இராணுவர் வீரர் கொல்லப்பட்டார்

Alberta இல் அமைந்துள்ள இராணுவ தளத்தில் நடந்த பயிற்சி விபத்தில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.


இந்த இராணுவ வீரர் தற்செயலாக இராணுவ பயிற்சியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்ட இராணுவ வீரர் Trenton, Ontario வில் அமைத்துள்ள இராணுவ தளத்தின் வீரர் என்று அறியப்படுகிறது.


கடந்த மாதம் Ukraine நாட்டில் இருந்து கனடாவுக்கு திரும்பிய இராணுவ வீரர்கள் தங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தும் படியோ, அல்லது வேறு இடங்களில் அவர்கள் தங்களை கட்டாயமாக தனிமை படுத்தவேண்டும் என்ற அறிவிப்பு இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் அறியப்படுகிறது.
“CAF இன் அனைத்து அணிகளின் சார்பாக, இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாதுகாப்பு ஊழியர்களின் தலைவர் ஜெனரல் Jonathan வன்ச ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனும்(Harjit Sajjan ) சனிக்கிழமை தனது இரங்கலை ட்வீட் செய்துள்ளார்.