
வோடபோன் நெட்வோர்க் நிறுவனம் ரூ.819 க்கு புதிய பிரிபெய்ட் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவில் உள்ள நெட்வொர்க் நிறுவனங்களில் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்கள் இடையே பரஸ்பரம் போட்டி நிலவுகின்றது. இரு நிறுவனங்களும் மாறி மாறி ஆஃப்பர்களை வாரி வழங்கி வருகின்றது.
தற்போது கொரொனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கி டேட்டாக்கள் உபயோகித்து வருவதால், ரூ.819 புதிய பிரீபெய்ட் பிளானை அறிவித்துள்ளது.
இது 84 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா என மொத்தம் 168 ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்கள் கொடுகப்படுகின்றன.