Air Canada நிறுவனம் Covid-19 மருத்துவ, தனிமைப்படுத்தல் காப்புறுதியினை சர்வதேச பயணிகளுக்கு வழங்க இருக்கின்றது

Air Canada  நிறுவனம் Covid-19 மருத்துவ, தனிமைப்படுத்தல் காப்புறுதியினை சர்வதேச பயணிகளுக்கு வழங்க இருக்கின்றது கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் இப்போது கனேடியர்களை வெளிநாடுகளுக்கு பயணிக்க ஊக்குவிக்கும் முயற்சியாக COVID-19 மருத்துவ மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காப்புறுதியினை  வழங்க இருக்கின்றது

இந்த குறிப்பிட கால சலுகையினை Air Canada வியாழக்கிழமை (sep17)அறிவித்தது. இந்த காப்புறுதி திட்டம்  செப்டம்பர் 17 முதல் 2020 அக்டோபர் 31 வரை கனேடிய குடியிருப்பாளர்களால் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து சுற்று-பயண சர்வதேச விமானங்களையும் உள்ளடக்கியது.

பயணங்கள் 2021 ஏப்ரல் 12 க்கு முன்பு முடிக்கப்பட வேண்டும். இந்த காப்புறுதி திட்டத்தின்படி  வெளிநாட்டில் இருக்கும்போது பயணி ஒருவருக்கு covid-19தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் பின்வரும் செலவினங்களுக்கு உதவும் . COVID-19 சிகிச்சை மருத்துவ செலவினங்களுக்காக காப்பீட்டாளருக்கு CDN $ 200,000 வரை. தனிமைப்படுத்தப்பட்ட செலவுகளுக்காக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு  $ 150CDN வரை (உணவு + விடுதி); ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு $ 300CDN வரை அதிகபட்சம் 14 நாட்கள் வரை. கனேடிய அரசாங்கத்தின் ஆலோசனையின் படி பயணி ஒருவரின் தொற்று நிலை மூன்றில் இருந்து நான்காக மாறும் பொது     வீடு திரும்புவது தொடர்பான செலவுகளுக்கு $ 500CDN வரை.