80 லட்சத்தை கடந்தது இந்தியாவில் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 49,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 80,40,203 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 1,20,527 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 73,15,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,03,687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை மொத்தம் 10,65,63,440 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 10,75,760 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக ICMR தெரிவித்துள்ளது.