8 லட்சம் பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்பு

8 லட்சம் பெறுமதியான முதிரை மர குற்றிகள் பூநகரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. பூநகரி அரசபுரம் பகுதியிலிருந்து வாகனமொன்றில் ஏற்றியவாறு பயணித்த போது சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோதே இவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தை செலுத்திய சாரதி தப்பி சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பூநகரி போலீஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைவாக குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பரமங்கிராய் சந்தியில் வைத்தே மரக்குற்றி ஏற்றிய வாகனம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.