78 லட்சத்தை கடந்தது இந்தியாவில் கோவிட் -19 பாதிப்பு !

இந்தியாவில் கோவிட் -19 வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 78,14,682  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 70,16,046 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,80,680  பேருக்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கோவிட் -19 நோய் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1,17,956 பேர் இந்தியாவில் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 53,370 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67,549  பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 650 பேர் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.53 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. 

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கோவிட் -19 பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது. மொத்தமாக இதுவரை 10,13,82,564 மாதிரிகள் கோவிட் -19 பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 12,69,479 கோவிட் -19 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.