ஒண்டாரியோவில் கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

ஒண்டோரியோவில் நேற்று கோவிட்-19 தொற்றுக்கள் 732 தொற்றுக்களாக பதிவாகியுள்ளது.இதனால் பொதுச்சுகாதார தலைமை மருத்துவர் Dr.Ellen De Villa பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் டொராண்டோவில் ஓடாவா,பீல்ப் போன்ற இடங்களில் உணவுச்சாலை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 100 ஆகவும் மட்டுப்படுத்த வேண்டும் என்றும் உணவுச்சாலை மற்றும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு மற்றும் இரவு களியாட்ட விடுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம் உள்ளே அமர்ந்திருப்போரின் எண்ணிக்கையை 75 ஆகவும் சமூக இடைவெளியுடனான மேசை ஒழுங்கமைப்பு பேண வேண்டும் என்றும் மற்றும் 6 நபர்களுக்கு மேல் ஒரு மேசையில் அமரக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை பரிந்திரைத்துள்ளார்.

அத்துடன் முதல்வர் Doug Ford ஒண்டோரியோவில் தொழில்புரியும் நிலையங்கள் மக்கள் போக்குவரத்து நிலையங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளார்.

732 ஆக அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 தொற்றுக்களில் 315 தொற்றுக்கள் பாடசாலைகளிலும் 14 தொற்றுக்கள் வயது முதிர்ந்தோர் பராமரிப்பு நிலையங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன் பொதுமக்கள் அத்தியாவசியமான தேவைகள் இல்லாத நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் தோழர்களுக்கிடையில் ஒன்று சேர்ந்திருத்தல் போன்றவற்றை மறுபரிசீலனை செய்யுமாறு Dr.Ellen De Villa பரிந்துரைத்துள்ளார்.