”7 பேர் விடுதலை தொடர்பான திமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை”- துரைமுருகன்!

திமுகவின், தமிழகம் மீட்போம் என்ற பொதுக்கூட்டம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், அதிமுக அரசிடமிருந்து தமிழக மக்களை மீட்பதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில், திமுக உறுதியாக உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களை விடுவிக்க வேண்டுமென்ற திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.