60 வருட வரலாற்றில் வவுனியா கொந்தக்காரன்குளம் அ.த.க. பாடசாலை மாணவன் சித்தி

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொந்தக்காரன்குளம் அ.த.க பாடசாலையில் 60 வருடகால வரலாற்றில் முதல் தடவையாக 2020 ஆண்டு இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சுரேஸ்குமார் ஆதேஷ் 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  


ஏனைய 07 மாணவர்களும் சி.லக்சிகன் 154 புள்ளிகளையும் ச.ரம்சிகா 145 புள்ளிகளையும் அ.லக்சினா 137 புள்ளிகளையும் யோ.சந்தோஸ் 137 புள்ளிகளையும் க.நிக்சன் 122 புள்ளிகளையும் ஞா.தனுசிகன் 115 புள்ளிகளையும் ச.கபிசனா 105 புள்ளிகளையும் பெற்று 100 வீத சித்தியையும் பெற்றுள்ளார்கள். 
இச்சாதனையை நிலை நாட்டுவதற்கு வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கிய அதிபர் ந.நவரட்ணம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசிரியை செல்வி ரெபோஜினியையும் பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.​இப் பாடசாலையானது போக்குவரத்து வசதிக் குறைவான பிரதேசத்தில் அமைந்திருப்பதுடன் 40*20 அடி அளவுடைய ஒரு வகுப்பறைக் கட்டத்திலேயே தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவர்களுக்கு 03 ஆசிரியர்கள் பல்வேறு இடையூறுகளுக்கும் வளப் பற்றாகுறைவுகளுக்கும் மத்தியிலேயே கல்வி கற்பிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.