6 மாதங்களுக்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா

6 மாதங்களுக்கு பின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நயன்தாரா, தற்போது படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த காரணத்தினால் படப்பிடிப்பு நடக்கவில்லை எனினும் நடிகை நயன்தாரா இடையில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்கு, கோவாவில் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் கொண்டாடுவதற்கும் தனி விமானத்தில் சென்று வந்தார்.

இருப்பினும் அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு பின்னர் தற்போது மலையாள படமான ’நிழல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கொச்சியில் நடந்த இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே இவருடன் நயன்தாரா 12 வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் நடித்து உள்ளார் என்பதும் இந்த படத்தை அப்பு என் பட்டாத்திரி என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.