6 பேர் கைது

சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1400 கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்பிட்டி பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் (30) புத்தளம் நீதவானிடம் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.