6 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை

இலங்கையில் இதுவரை 6 இலட்சத்திற்கும் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் தொற்றுநோயியல் பணியகத்தினால் 8272 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 606693 ஆக உள்ளது.