51 இலங்கையர்கள் கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக மத்திய கிழக்கின் இரு நாடுகளிலிருந்து 51 இலங்கையர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.அதன்படி கட்டார், தோஹாவிருந்து 31 இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும் தொழில் வாய்ப்புக்காக ஓமானுக்குச் சென்ற 20 இலங்கையர்கள் இன்று காலை மஸ்கட்டிலிருந்து ஓமான் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.