5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகக் கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில், வளிமண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்திற்கு, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழையும் பெய்யக்கூடும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.