5ஜி வசதியுடன் அறிமுகமான ஆப்பிள் 12ஐபோன்!

iPhone 12 Lineup's mmWave 5G Support Limited to the United States -  MacRumors

அதிநவீன 5ஜி தொழில்நுட்ப வசதிகளுடன் வெளியாகியுள்ள புதிய ஐபோன் 12 மாடல்கள் இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறைந்த விலையிலிருந்து ஏகப்பட்ட ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கொட்டி கிடந்தாலும் ஆப்பிள் ஐபோனுக்கு உள்ள மவுசே தனி. புதுப்புது மாடல்களை பெரிய விலையில் அறிமுகப்படுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் தற்போது ஐபோன் 12 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

முதன்முறையாக 5ஜி வசதியுடன் ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகிய மாடல்கள் சந்தைக்கு வருகின்றன. இதில் ஐபோன் 12 மேக்ஸ் விலை இந்திய மதிப்பில் ரூ.1,19,000 தொடங்கி ரூ.1,59,000 வரையிலும் ரேம் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரேம் அடிப்படையில் ஐபோன் 12 ப்ரோ ரூ.1,19,000 முதல் ரூ.1,49,000 வரையிலும், ஐபோன் 12 ரூ.79,000 முதல் ரூ.94,900 வரையிலும், ஐபோன் 12 மினி ரூ.69,900 முதல் ரூ.84,900 வரையிலும் விற்பனைக்கு வருகிறது. மாடலுக்கு 3 வகை ரேம்கள் என மொத்தம் 12 வகை ரேம்கள், வசதிகள் கொண்ட ஐபோன்கள் வெளியாகின்றன.

இதன் மூலம் பட்ஜெட் போன் வாங்குபவர்கள் முதல் லக்ஸரி போன் வாங்குபவர்கள் வரை அனைவரையும் ஈர்க்க முடியும் என ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.