46 நாட்களில் முடிந்த த்ருஷ்யம் 2 படப்பிடிப்பு… மற்ற மொழி தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் உருவாகி வரும் திருஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இப்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்க இருக்கும் திருஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடங்கியது. இந்நிலையில் நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். இதனால் மற்ற மொழிகளில் உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆர்வமாக படத்தின் ரீமேக் ரைட்ஸை வாங்க ஆவலாக உள்ளனர்.