45,636 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

நாடளாவிய ரீதியில் இயங்கும் 10 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த 606 பேர் இன்று (28) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 45,636 பேர் முப்படைகளால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவு செய்துள்ளனர்.

77 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 7,484 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மூன்று நாடுகளில் இருந்து மேலும் 189 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஓமானில் இருந்து 101 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 50 பேரும், ஜப்பானில் இருந்து 38 பேரும் இன்று காலை நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.