4ஜி இணைய வேகத்தில் கெத்து காட்டும் ஜியோ நெட்வெர்க்!

4ஜி இணைய வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முன்னிலையில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வெர்க் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

‘ஸ்மார்ட்போன் இல்லாத ஆளே இல்லை’ என்று கூறும் அளவுக்கு இந்தியர்களிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு தீவிரமாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் நெட்வெர்க் இணைப்புகள் கிடைப்பது அதற்குக் காரணமாகும்.

நெட்வெர்க் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான வேகமான நெட்வெர்க் சேவைகளை வழங்கி வருகின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதால் வீடுகளில் 4ஜி இணைப்புகள் அதிகரித்துவிட்டன.

நெட்வெர்க் சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகிலிருந்தே போட்டி அதிகரித்துள்ளது. நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு இணைய இணைப்புகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் 4ஜி இணைய வேகத்தில் 16.5 எம்பிபிஎஸ் வேகத்துடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருப்பதாக மைஸ்பீடு தளத்தில் மேற்கொண்ட ஆய்வு மூலமாகத் தெரியவந்துள்ளது.

ஜியோவைத் தொடர்ந்து வொடாபோன் ஐடியா நெட்வெர்க்கின் பதிவிறக்க வேகம் 7.5 எம்பிபிஎஸ் ஆக இருக்கிறது. 7.2 எம்பிபிஎஸ் வேகத்துடன் 3ஆவது இடத்தில் ஏர்டெல் உள்ளது.