சிறைச்சாலையில் 19 கையடக்க தொலைபேசிகள் மீட்பு

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 19 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (24) காலை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.