30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக வெப்பநிலையை பதிவு செய்த அண்டார்டிகா – உலக வெப்பமயமாதல் எதிரொலி

நகர மயமாக்கம், தொழிற்சாலை புகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பசுமைக் குடில் வாயுக்கள் அதிகரித்து புவி பல்வேறு பருவநிலை மாற்றங்களை சந்தித்து வருகிறது. இதனால் ஆர்டிக் மற்றும் ஆண்டார்டிக் துருவப்பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து பனிப்பாறைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உருகி வருகிறது. இதன் காரணமாக கடல்மட்டம் உயர்வதோடு நிலப்பரப்புகளும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இந்த பருவநிலை மாற்றத்தை தடுக்க உலக நாடுகள் கடந்த 2015 ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்த திட்டங்கள் எதுவும் முழுமையான செயல்முறைக்கு வரவில்லை. அதிகரித்து வரும் பருவநிலை பாதிப்புகள் தொடர்பாக சமீபத்தில் எச்சரித்திருந்த ஐநா, பருவநிலை மாற்றத்தை தடுக்க சரியா நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்கவில்லை என்றால் மக்கள் அழிவை சந்திப்பது உறுதி என தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் அண்டார்டிகாவில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.


ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், கிங் ஜார்ஜ் தீவில் உள்ள சிலி விமானப்படையின் ஃப்ரீ பேஸ் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த முடிவு தெரியவந்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளார்கள், அண்டார்டிக் தீபகற்பத்தின் வடக்கு முனையில், இந்த ஆண்டு இதுவரை சராசரி அதிகபட்ச வெப்பநிலை 0 டிகிரியாக மட்டுமே இருந்தது. இது கடந்த 31 ஆண்டுகளாக எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால் தற்போது 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை சென்றுள்ளது. கடலின் வெப்பநிலை உயர்வது என்பது மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தெற்கு தெற்கு அரைக்கோளத்தின் குளிர்கால வெப்பநிலை இதற்கு மாறாக உள்ளது, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்டவை -16.8 டிகிரி செல்சியஸை எட்டியது, இது 1970 க்குப் பிறகு மிகக் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.