3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் 20 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குஜராத்தில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 20 வயது இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை கொலை செய்த இளைஞர், அவரது நகைகளையும் திருடிச் சென்றுள்ளார். இது மிகவும் மோசமான சம்பவம் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த தவறினால், மிகக் கடுமையான சிறைதண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.