27 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

Wrong path? Scientist questions Italy's coronavirus strategy | Italy News |  Al Jazeera

இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்திற்கும் அதிமாக உள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 27 லட்சத்தை தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 55,079 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலியானவர்கள் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,937 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 19.77 லட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களில் பலி எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.