25 வருடங்களுக்கு முன்னால் தலைவர் ரஜினி செய்த மாபெரும் வசூல் சாதனை.. விஜய், அஜித் முறியடிப்பார்களா?


தமிழ் சினிமாவின் வசூல் வில்லனாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த பல பல திரைப்படங்கள் வசூலில் வேட்டையாடி உள்ளன.


தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பல வசூல் சாதனைகளை புரிந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான படம் முத்து. இப்படம் உலகளாவிய ரீதியில் மாபெரும்
வசூல் சாதனைகளை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் ஜப்பானில் மட்டும் கிட்டத்தட்ட 450 மில்லியன் யென் வசூலைக் குவித்து தற்போது வரை முதலிடத்தில் இருப்பது முத்து படம் தானாம் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருப்பது பாகுபலி-2 (275M), 3 இடியட்ஸ் (149M), இங்கிலீஷ் விங்கிலிஷ்(146M), சாஹோ(100M) போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.
ஆனால் இதுவரை முத்து படத்தின் ஜப்பான் வசூலை இந்திய நடிகரான யாராலும் முறியடிக்க முடியவில்லை.
ஏன் நம் தமிழ் திரையுலக வசூல் மன்னர்களான தல அஜித், தளபதி அவர்களால் கூட தற்போது வரை ரஜினியின் வசூல் சாதனையை தோற்கடிக்க முடியவில்லை.