25 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியதால் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தார். அவர், இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன் நாடாளுமன்ற கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் மக்களவையில் 17 எம்.பி.க்களுக்கும், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என மொத்தம் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 40 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.