24 வயதில் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிக்பாஸ் பிரபலம்! கடைசி நேரத்தில் நடந்த சோகம்!

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் மேனேஜராக பணிபுரிந்து வந்த பிஸ்தா தகட் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் கிரியேட்டிவ் மேனேஜராக பணியாற்றிய பிஸ்தா தகட் நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென வாகனத்திலிருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானதாக தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிரியேட்டிவ் மேனேஜராக மிக இளவயதில் அதாவது 24 வயதில் திறம்பட செயல்பட்டு வந்த பிஸ்தா தகட் அவர்களின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹவுஸ்மேட்ஸ்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர். மேலும் சல்மான்கானுடன் பிஸ்தா தகட் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் அவருக்கு அனைத்து பிக்பாஸ் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சி முடிவடையவுள்ள கடைசி நேரத்தில் 24வயது பிக்பாஸ் பிரபலம் எதிர்பாராத விதத்தில் விபத்தில் மரணமடைந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.