2000 கோடிகளுக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்த திரைப்படம்.

இதுவரை இந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் வரிசையில் பாகுபலி 2 மற்றும் தங்கல் ஆகிய படங்களுக்கு மிகப்பெரிய இடம் உண்டு.

இரண்டு படங்களும் 2000 கோடிகளுக்கு மேல் உலக அளவில் வசூல் சாதனை செய்துள்ளது. இனிமேல் இந்த படத்தின் வசூல் சாதனையை எந்த ஒரு படமும் ஏன் அவர்களின் படங்கள் கூட மிஞ்ச முடியாது எனும் அளவுக்கு உச்ச சாதனையை செய்தது. ஆனால் ஒரு சராசரி வசூல் உடைய ஹீரோவின் படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் சமீபத்தில் தூக்குப்போட்டு இறந்து போனவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவருக்கு உலகம் முழுவதும் இருந்து நிறைய இரங்கல்கள் வந்தன.

அதுமட்டுமில்லாமல் தோனி படத்தில் நடித்தால் தமிழ்நாட்டிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த தில் பசாரா என்ற படத்தை டிஸ்னி நிறுவனம் தங்களது ஹாட்ஸ்டார் OTT தளத்தின் மூலம் வெளியிட்டது.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான இந்த படம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 95 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு OTTயில் அதிக அளவு பார்வையாளர்களும் ஒரே நேரத்தில் ஏகப்பட்ட பயனாளர்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதில் தில் பசாரா படத்தை 95 மில்லியன் பேர் பார்வையிட்டதால் சுமார் 2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஹாட்ஸ்டார் OTT தளத்திற்கு வசூலாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த தகவலை ஏ ஆர் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் 2000 கோடி என்பதை குறிப்பிடாமல் 95 மில்லியன் பார்வையாளர்கள் மட்டும் என்பதை தெளிவாக தெரிவித்துள்ளார்.