2 ஆண்டுகளுக்குப் பின் படப்பிடிப்பில் ஷாருக் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Shah Rukh Khan 100+ Hot And Handsome Photos And Wallpapers HD -  IndiaTelugu.Com

நடிகர் ஷாருக் கான் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் பாட்ஷா , கிங் கான் என பலவாறு புகழப்படுபவர் நடிகர் ஷாருக் கான். கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால் சினிமாவில் இருந்து ஒரு சிறு ஓய்வில் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் இயக்குனர் அட்லி உள்பட பல இயக்குனர்களிடம் கதைகேட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார்.

அதில் ஒன்று வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆன்ந்த் இயக்கும் பதான் படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சல்மான் கான் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்து ஷாருக் கான் ராஜ்குமார் ஹிரானி, அலி அப்பாஸ், ராஜ் டிகே மற்றும் அட்லி ஆகியோரும் படங்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.