19 ஆவது திருத்தம் மிகவும் சிக்கலானது

19 ஆவது திருத்தத்தில் உள்ள சில பிரிவுகளை உள்ளடக்கிய சில உட்பிரிவுகள் 20 ஆவது திருத்தத்தில் தொடரும் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடகேவ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் 2 தடவை மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியும் என்கின்ற உட்பிரிவுகள் தொடரும் என கூறியுள்ளார்.

மேலும் புதிய அரசியலமைப்பு மற்றும் துணை பிரதமர் பதவி குறித்து பேசிய அவர், 19 ஆவது திருத்தம் மிகவும் சிக்கலானது எனவும் தெரிவித்துள்ளார்.