12 மணி நேரத்தில் ரூ. 350 கோடி வருவாய்: அசத்தும் எல்ஜி!

The LG G8X ThinQ brings a 32MP selfie cam, updated DualScreen -  GSMArena.com news

பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. 

 ’பிக் பில்லியன் டேஸ்’ விற்பனையை அக் 16 துவங்கியது. இது அக் 21 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கு அக்.15 முதலே இந்த சிறப்பு விற்பனை தொடங்கியது. இந்த விற்பனையில் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி வழங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 

அதில் குறிப்பாக ல்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்தது. இந்த விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. 

அதாவது, மொத்தம் 12 மணி நேரம் விற்பனை நடைபெற்றதால், குறைந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எல்ஜி சுமார் 1.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.