1141 பேர் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 465 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 477 பேரும் மற்றும் வேறு குற்றங்கள் தொடர்பில் 98 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.