11 ஆண்டுகளில் சினிமா கண்டுள்ள மாற்றம்… நாமும் மாறனும் – நடிகர் விஷ்ணு விஷால்

VISHNU VISHAL - stay home stay safe on Twitter: "🤗🤗… "

எத்தனையோ பிரச்சனைகளைக் கண்டு மீண்டு வந்த தமிழ் சினிமாவுக்கு இந்தக் கொரொனா காலத்தில் திரையரங்குகள் திறக்க வில்லை என்பதால் ஓடிடி தளங்களில் படத்தை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள்கூட ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுவதால் அதற்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெட்பிளிக்ஸ்,அமேசான், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடியில் ஒருமுறை படம் பார்க்க குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியானது.  இதற்கு எதிராக பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது 11 வருடங்களில் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் , தொழில் நுட்பத்தால் நேர்ந்துள்ள வளர்ச்சிபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் ரீலில் இருந்து டிஜிட்டல் சினிமாவிலும் , சில கமர்ஷியல் இயக்குநர்கள் கதைகளுக்கு முக்கியத்துவமுள்ள படங்களுக்கும் மாறியுள்ளனர்.  பெரிய திரையில் இருந்து படங்கள் மொபைல் திரைக்கு மாறியுள்ளது.  இயக்குநர்கள் நடிகர்களாகவும், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாகவும் மாறி வெற்றி பெற்றுள்ளனர். இந்தக் கொரோனா காலத்தில் பெரிதாக ஓடிடி தளத்தில் படங்கள் ரிலீசாகிறது. அதனால் காலத்திற்கு ஏற்ப புதியவற்றையும் தொழில்நுட்பத்தையும் கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.