106 வயது மூதாட்டி கொரோனாவை வென்று வீடு திரும்பினார்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கு தற்போது வரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. 100 வயதைக் கடந்தவர்களும் கொரோனாவை வென்று வீடு திரும்பி, மற்றவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வகையில் இருக்கின்றனர். 

இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 106 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவரை மருத்துவர்கள், செவிலியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு, அவர் சிரிப்புடன் எடுத்துள்ள புகைப்படம் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மூதாட்டி சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக மருத்துவர்களும் பாராட்டியுள்ளனர்.