103,651 சந்தேகநபர்கள் கைது

கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

103,651 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று (20) பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை, போதைப்பொருட்கள், வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது 23 கிலோவிற்கு அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.