1000 லிட்டர் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சுய உதவிக்குழு பெண்கள்!

சிவகங்கை அருகே வி.மலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், நாள்தோறும் கூட்டுறவுபட்டி பால் பண்ணையில், பால் கொள்முதல் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், சுயஉதவிக்குழு மூலம் பாலை கொள்முதல் செய்ய முடியாது என கூட்டுறவுப்பட்டி பால் பண்ணை தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

எனவே, பால் கொள்முதல் செய்ய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், தங்களது சங்கத்தை பதிவு செய்ய வலியுறுத்தியும், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள், மானாமதுரை துணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கொண்டு வந்த 1000 லிட்டர் பாலை, சாலையில் கொட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.