100 நாள் வேலை திட்டத்தில் தீபிகா படுகோனே பெயர்: அதிர்ச்சி தகவல்

When Deepika Padukone opened up on relationship woes: Infidelity is the  deal breaker | Celebrities News – India TV

கிராமத்தில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம். ஆனால் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் நடிகை தீபிகா படுகோன புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டைகள் உருவாக்கி சிலர் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய 100 நாள் வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளை உருவாக்கி அதிகாரிகள் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்காமல் அவர்களது பெயரில் போலி அட்டைகளை உருவாக்கி அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசால் செலுத்தப்படும் சம்பளத்தை அதிகாரிகள் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை முறையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.