10 இலட்சம் பெறுமதியான முதிரைக்குற்றிகளுடன் ஒருவர் கைது

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லப்பட்ட முதிரை மரக்குற்றிகளை புளியங்குளம் விசேட அதிரடி படையினர் மீட்டுள்ளனர்.

 
பாலமோட்டை பகுதியில் முதிரை மரங்கள் கடத்தப்படவுள்ளதாக  விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து  இன்று அதிகாலை குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் லொறி ஒன்றை வழி மறித்து சோதனையை மேற்கொண்டனர், 
இதன்போது உமி மூடைகளால் மறைத்துவைக்கப்பட்டு கடத்தி செல்லப்பட்ட பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 23 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,அவற்றை கடத்திச்செல்லப்பயன்பட்ட வாகனத்தையும் விசேட அதிரடிபடையினர் மீட்டுள்ளனர். 
குறித்த மரக்குற்றிகள் யாழ்நோக்கி கடத்தி செல்லப்படவிருந்ததாக தெரிவித்த விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றபட்ட முதிரைக்குற்றிகளையும், கைதுசெய்யப்பட்ட நபரையும் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.