10 இலட்சத்தை கடந்தது மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் தொற்று

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துள்ளன.

நேற்று சனிக்கிழமையன்று நாட்டில் புதிதாக கொரோனா தொற்று உறுதியான 5,860 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 இலட்சத்து 3 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை மேலும் 635 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கைகளை விட உண்மையான நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் முன்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.