ஹேராம் படத்தில் எனது காட்சிகள் நீக்கப்பட்டன – நவாஸுதீன் சித்திக் வருத்தம்!

கமலுடன் நடிக்க ஆசை... பிரபல பாலிவுட் நடிகர் விருப்பம்! | Movies News in  Tamil

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் நவாஸுதின் சித்திக் ஹேராம் படத்தில் நடித்திருந்தாராம்.

இந்திய அளவில் சினிமா விரும்பிகளால் ஆராதிக்கப்படும் நடிகர்களில் நவாஸுதின் சித்திக்கும் ஒருவர். ஆரம்பத்தில் பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த அவர் பின்னர் கேங்ஸ் ஆஃப் வாசேபூர் படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ள அவர் தமிழில் பேட்ட படத்தில் கூட நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் ஹேராம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாகவும், ஆனால் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் திரையில் அந்த படத்தை பார்க்கும் போது தன் காட்சிகள் இல்லாததால் அழுததாகவும் சொல்லியுள்ளார். மேலும் ஹேராம் மற்றும் ஆளவந்தான் ஆகிய படங்களின் இந்தி வெர்ஷனில் கமலுக்கு இந்தி பயிற்றுனராக தாம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.