ஹெரோயினுடன் ஒருவர் கைது

விளக்கமறியலில் உள்ள பிரதான குற்றவாளியான துப்பெகி ஆராச்சிலாகே பிரசாத் ருவன் குமார எனும் குடு ரொஷான் என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவர் 5 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் வெல்லம்பிட்டிய, வெலேவத்த பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.