ஹீவாவே நிறுவன அதிகாரியின் தொலைபேசி விவரங்களை கோரினார்கள் என நம்பவில்லை -எல்லைப்பாதுகாப்பு அதிகாரி

பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றில் 2018 ம் ஆண்டு டிசம்பர் 01 ம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குவாவே நிறுவனத்தின் நிதி நிறைவேற்று அதிகாரி Meng Wanzhou இன் விவகாரம் குறித்து நடைபெற்ற விசாரணைகளின் போது கனேடிய காவல் துறை அதிகாரிகள் Meng Wanzhou இன் தொலைபேசி விவரங்களை கோரினார்கள் என்று தன்னால் நம்ப முடியவில்லை என எல்லைப்பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றில் சாட்சியளித்த போது எல்லைப்பாதுகாப்பு அதிகாரி சொளமித் காட்றாக்டா விமான நிலையத்தில் வைத்து Meng Wanzhou இடம் கனேடிய காவல்துறையினர் அவரின் செல்லிடப்பேசியின் நுழைவுச்சொல் உள்ளிட்ட முக்கிய விபரங்களை கோரியிருப்பார்கள் என தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்தார்.அத்துடன் Meng Wanzhou கைது செய்யப்பட்ட போது தகவல்கள் பிழையான வகையில் திரட்டப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த தகவல்கள் எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகளினால் திரட்டப்பட்ட போதிலும் தவறுதலாகவே இந்த விபரங்கள் காவல்துறையினருடன் பகிரப்பட்டதற்காக தெரிவிக்கப்படுகிறது.