ஹரிஷ் கல்யாண் – ப்ரியா பவானிசங்கர் பில்டப் செய்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கர் பில்டப் செய்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கருக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருக்கும் நிலையில் திடீரென அவர் நடிகர் ஹரிஷ் கல்யாணை காதலிப்பது போன்ற ஒரு டுவிட்டை பதிவு செய்தார். அதே போல் ஹரிஷ் கல்யாணும், தனது டுவிட்டரில் பிரியா பவானி சங்கர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இதனை அடுத்தே திடீரென இருவரும் காதலிக்கிறார்களா என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது ஆனால் இந்த புகைப்படங்கள் தெலுங்கு ரீமேக் படமான பெல்லி சூபுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக் படத்திற்கான பில்டப் புரமோஷன் என்பதும் தெரிய வந்ததும் ரசிகர்கள் கடும் அதிருப்தி மற்றும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை நடிகர் விஜய் தேவர்கொண்டா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“ஓ மணப்பெண்ணே” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கி வருகிறார். விஷால் சந்திரசேகர் இசையில், கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவில் கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஹவிஷ் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.