”ஹத்ராஸ் போன்ற சம்பவம், மகாராஷ்டிராவில் நடந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்”- உத்தவ் தாக்கரே

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்தால் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அம்மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பெண்ணின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஹத்ராஸ் போன்ற ஒரு சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்தால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். காவல்துறை மீது பயமும், மக்கள் பாதுக்காப்பாக இருக்கும் உணர்வும் மாநிலத்தில் எப்போதும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கருத்து கூறி வருகின்றர். உத்தரபிரதேச அரசு மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகளை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.